கிளிநொச்சியில் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் பெற்ற இரு அதிகாரிகள்!

கிளிநொச்சி ,உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் அனுமதியற்ற கட்டிடம் ஒன்றிற்கு கட்டிட அனுமதிக்காக நேற்று (04-09-2024) லஞ்சம் பெற்ற இரு அதிகாரிகளையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதி வான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிககால் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்

இதன்போது குறித்த இலஞ்சம் வழங்கியதாக குறிப்பிடப்படும் அறுபதாயிம் ரூபா பணம் சான்றுப் பொருளாக மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

குறித்த இருவரையும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

அதாவது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றுக்காக மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் லஞ்சம் கோரியதாகவும் இதில் முதற்கட்டமாக 60,000நேற்று குறித்த கட்டிட உரிமையாளரால் வழங்கப்பட்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஊழல் ஆணை குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

Admin Avatar

More for you