Tuesday, April 29, 2025
HomeUncategorizedசந்தேகமின்றி ரணில் வெற்றி பெறுவார்-மனுஷ!

சந்தேகமின்றி ரணில் வெற்றி பெறுவார்-மனுஷ!

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் சிலர் முன்கூட்டியே வெற்றி பெற்றாலும், ரணில் விக்கிரமசிங்ஹ சந்தேகத்திற்கு இடமின்றி செப்டம்பர் 21 ஆம் திகதி வெற்றியீட்டுவார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் மனுஷ நாணயக்கார, இன்று (22. 08.3024) வடிவேல் சுரேஷின் பதவியெற்ப்பு நிகழ்வின் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தலதா அத்துகோரள ஆற்றிய உரையானது சமகி ஜன பலவேகயவின் அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியில் எதிரொலிக்கும் அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைச் சுற்றி திரளுவதற்கு அவர்களைத் தூண்டும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியின் கிராம மட்ட உறுப்பினர்கள் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்கள். ஆகவே தமது தலைவர் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் திட்டமிட்டு செயற்ப்படுகின்றதால், தங்களது ஆதரவை அவருக்கு வழங்க மக்கள் தயாராக உள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, தேவையான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் தொழில் அமைச்சுக்கு வழங்கிவருகின்றார் . எனவே, திட்டமிட்டபடி அமைச்சின் அனைத்து பணிகளும் தொடரும்.

தொழில் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் வடிவேல் சுரேஷ் தொழிலாளர் துறை, முறைசாரா தொழிற்த் துறை தொழிலாளர்களின் ஓய்வூதியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளையும் முன்னெடுத்தது வருகின்றார்.

“பாராளுமன்றத்தில் தலதா அத்துகோரல ஆற்றிய உரையில் அரசியல் வட்டாரத்தில் பலரையும் எதிரொலிக்கும் முக்கியமாக ஜனதாதளத்தை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்கள் கூட சஜித் பிரேமதாசவின் அனுபவமின்மை, ஜனாதிபதியாக வருவதற்கான அவரது பொறுமையின்மை மற்றும் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டபோது அதனை ஏற்க மறுத்தமை பற்றிய விடயங்களை நாம் முன்னேரே கூறிவிட்டோம் .

திருமதி தலதாவின் நேற்றைய பாராளுமன்ற விசேட உரையின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது.”

எதிகட்ச்சித்தலைவரிடம் முறையான அபிவிருத்தி வேலைத்திட்டம் எதுவும் இல்லை அவர் எல்லோரையும் சமநிலைப்படுத்த முயல்கிறார்.
அன்று அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக எதையும் செய்யும் ஒருவராக சஜித்தை நாம் அறிந்து கொண்டோம்.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் தலைவர்கள் எங்களுக்கு தேவை இல்லை. மாறாக நாட்டையும் அதன் எதிர்காலத்திற்காக முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்யும் தலைவர் ஒருவரே எமக்குத் தேவைப்படுகின்றார்.

எதிர் வரும் 21ம் திகதி தேர்தலில், சிலர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக நம்புகின்றனர். எது எவ்வாறாயினும் 21ஆம் திகதி எமது வெற்றியை உறுதி செய்வோம்.
எமது வெற்றியின் பின் ஐ .ம. ச. பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைவார்கள். இந்நிலையில் சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவதை மீள்பரிசீலிப்பாரா என்பது எமக்குத் தெரியவில்லை. அதற்குள் பாரளுமன்ற உறுப்பினர்களுடன் ஐ. ம. ச. கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் வெளியேறி விடுவார்கள் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments