இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் விடயம் தற்போது சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது நாளுக்கு நாள் புதிய அறிவிப்புக்களும் கட்சி தாவல்களும் இடம் பெற்று கொண்டே இருக்கின்றது
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு பல்வேறு போலிசெய்திகள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது அவற்றிலும் அன்மைகாலமாக AI தொழில் நுட்பத்தை பயண்படுத்தி துல்லியமான போலி செய்திகளை உருவாக்கும் செயற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது
குறிப்பாக இம் முறை தேர்தலின் போது 39 நபர்கள் ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ள நிலையில் வேட்பாளரையும் வாக்காளர்களையும் குழப்பும் முகமாக இவ்வாறான புதிய தொழில்நுட்பம்க்களை பயன்படுத்தி போலி செய்திகள்,போலி கருத்தாடல்கள்,குரல்பதிவுகள்,காணொளிகள் உட்பட பல்வேறு மக்களை குழப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வாய்ப்புள்ளது
இலங்கை மாத்திரம் இல்லாது தற்போது AI தொழில்நுட்பமும் அதன் ஊடாக உருவாக்கப்படும் போலி செய்திகளும் கடும் சவாலாக மாறியுள்ளது
பல நாடுகளில் இலங்கை உட்பட AI தொழில்நுட்பத்தின் ஊடாக தயாரிக்கப்பட்ட போலி செய்திகள் காணொளிகல் வைரல் ஆகிய சம்பவங்களும் பதிவாகியுள்ளது
எனவே இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் என்பது ஒட்டுமொத்த சமூக கட்டமைப்புக்கும் முக்கியத்துவமான ஒன்றாகும் இவ்வாறான நிலையில் பிரதான ஊடகங்களும் சமூக வலைதலங்களும் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உணமையான செய்தியை வழங்குவதில் எவ்வாறு உறுதியாக உள்ளார்களோ அதை விட அதிகமாக இவ்வாறான போலி செய்திகளை வெளியிடாமல் இருப்பது தொடர்பாகவும் அதே நேரம் போலி செய்திகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் கடப்பட்டையும் கொண்டிருக்கின்றது
போலி செய்திகளை எப்போதும் தடுக்க முடியாது ஆனாலும் அவற்றின் ஊடாக சமூக சமய ரீதியில் ஏற்படும் குழப்பங்களை குறைக்க முடியும் குறிப்பாக தேர்தல் காலங்களில் ஏற்படுகின்ற பொதுவான முரண்பாடுகளுக்கு காரணமான போலி செய்திகளையும் அவற்றை உருவாக்க பயண்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பிலும் அவதானமாக இருப்போம்
சண்முகம் தவசீலன்