Monday, April 28, 2025
HomeUncategorizedவவுனியாவில் இடமாற்றம் செய்யப்படும் பாஸ்போட் அலுவலகம்!

வவுனியாவில் இடமாற்றம் செய்யப்படும் பாஸ்போட் அலுவலகம்!

வடக்கு மாகாண மக்களுக்காக இயங்கிவந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தற்போதைய முகவரியில் தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்தத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

பாஸ்போட் எடுப்பவர்கள் இதனை சரியாக கவனித்து குறிப்பிடப்படும் திகதிக்கு பின்னர் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள கீழ் குறிப்பிடும் முகவரியிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments