Monday, April 28, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் மீது மாணவ குழு தாக்குதல்!

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் மீது மாணவ குழு தாக்குதல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை முடித்து வெளியேறிய மாணவர்கள் மீது வெளியில் இருந்த வந்த மாணவ குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று மாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

பாடசாலை நுளைவாயிலில் பாடசாலை முடிந்து வெளியேறிய சாதாரணதர மாணவர்கள் மீது வெளியில் இருந்து வந்த உயர்தர மாணவர்கள் குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்கள்
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதியில் பெற்றோர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன் பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார்

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை அழைத்து சென்று தாக்குதல் நடத்திய மாணவர்களின் இருவரை கைதுசெய்துள்ளதுடன் 5ற்கு மேற்பட்ட மாணவ குழுவினர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் இவர்களின் வீடுகளுக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலீசார் அவர்களை உடனடியாக பொலீஸ் நிலைத்திற்கு கொண்டுவந்து ஒப்படைக்குமாறு பெற்றொர்களுக்கு அறிவித்துள்ளார்கள் இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இரண்டு மாணவர்களை கைதுசெய்த பொலீசார் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments