Monday, April 28, 2025
HomeUncategorizedவடமாகாண கரப்பந்தாட்டபோட்டியில் சாதனை படைத்த மு/ கலைமகள் வித்தியாலயம்!

வடமாகாண கரப்பந்தாட்டபோட்டியில் சாதனை படைத்த மு/ கலைமகள் வித்தியாலயம்!

வடமாகாண  கரப்பந்தாட்ட   போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

வடமாகாண விளையாட்டுப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தினை சேர்ந்த சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு 24.07.2024 அன்று பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண கரப்பந்தாட்டம் மற்றும் மல்யுத்த போட்டிகள் கடந்த 18தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் புத்தூர் மற்றும் ஆவரங்கால் போன்ற இடங்களில் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி மற்றும் நடராஜா இராமலிங்க வித்தியாலம் ஆகிய இரு பாடசாலைகளிலும் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

வடமாகண பெண்கள் அணியில் 38 பாடசாலை அணிகள் பங்குபற்றி இருந்தன இந்த போட்டியில்  16 வயது கரப்பந்தாட்ட பிரிவு பெண்கள் இறுதிப்போட்டியில் வற்றாப்பளை மகாவித்தியால அணியுடன் மோதி முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் வெற்றிபெறற்றுள்ளது.
18 வயது கரப்பந்தண்டா பெண்கள் இறுதிப்போட்டியில் மன்னார் தட்சணாமருதமடு பாடசாலையுடன் மோதி கலைமகள் வித்தியாலயம் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு வடமாகாணத்தில் ஒரு பாடசாலையில் இருந்து இரண்டு அணிகள் கரப்பந்தாட்ட போட்டியில் பங்கு பெற்ற மாகாணமட்டத்தில் முதலிடம் பிடித்த பெருமைக்குரிய பாடசாலையாக முள்ளியவளை கலைமகள் வித்தயாலம் காணப்படுகின்றது வெற்றிபெற்ற வீராங்கனைகளையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது இதன்போது மல்யுத்தபோட்டியிலும் வடமாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற வீராங்கனைகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments