Sunday, May 4, 2025
HomeUncategorizedயாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா!

யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா!

யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா!

சேகுவரா என அடையாள்படுத்தப்பட்ட ஒரு துடிப்பான இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதியில் உயிரிழந்த நிலையில் உடலமாக இன்று 25.07.2024 மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டினை பிறப்பிடமாகவும் வவுனியாவினை வசிப்பிடமாகவும்கொண்ட சோமஸ்ராஜா (சேகுவரா,இசைப்பிரியன்) என அழைக்கப்படும் இளைஞன் சுயாதீன  ஊடகவியலாளராகவும் பத்தி எழுத்தாளராகவும்,அரசியல் விமர்சகராகவும் கலைஞனாகவும் பல்துறைகளில் கால்பதித்த இளைஞன் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தையினை தன் உடன் பிறந்த உறவினை இழந்து தாயுடன் வாழ்ந்த நிலையில் தாயும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் ஊடகங்கள் சிலவற்றில் ஊடக பணிகளை செய்து வந்துள்ளார்.
இதற்கு முன்னார் யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வவுனியாவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்த்திஆனந்தான் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலங்களில் அவர்களுடன் பணியாற்றி வந்துள்ளான்.

இந்த நிலையில் இவரது உயிரிழப்பு மார் அடைப்பு என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் உடலம் யாழ் போதனா மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments