உயிருக்கு போராடிய யானைக்கு திணைக்களத்தினரால் சிகிச்சை!

மாங்குளம் கோணக்குளம் பகுதியில்  உயிருக்கு போராடிய   யானைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரால்  சிகிச்சை

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு கோணக்குளம் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு போராடும் நிலையில் காணப்படுவதாகவும்

கடந்த சில வாரங்களாக குறித்த யானை அப்பகுதிகளில் நடமாடி  வருவதாகவும் , யானையின் கால் பகுதியில் காயங்கள் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் , அந்த பகுதியின் குளக்கரை நீர் பகுதியில் குறித்த யானை படுத்திருப்பதாகவும் தெரிவித்த பொதுமக்கள் , சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பல தடவைகள்  அறிவித்தல் கொடுத்தும் அவர்கள் வரவில்லை என்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பாதுகாக்க தவறி நிற்பதாகவும் தெரிவித்திருந்தனர்

இவ்வாறான பின்னணியில் நேற்று மாலை முதல் யானைக்கான சிகிச்சை இடம்பெற்று வருவதுடன் உணவு வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இதுதொடர்பில் தெரிவிக்கையில் வடமாகாணம் முழுவதுக்குமாக ஒரு வைத்தியரே இருப்பதாகவும் அதனாலேயே இந்த நிலை எனவும் இருப்பினும்  அவர் நேற்று (16) வருகைதந்து சிகிச்சை அளித்ததாகவும் இன்றும் வருகை தருவார் என்றும் தாங்கள் உணவு கொடுத்து பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார்  

Tagged in :

Admin Avatar