பாம்புக்கடிக்கு இலக்கான மாற்றுத்திறனாளியான  முன்னாள் போராளி உயிரிழப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிழவன்குளம் பகுதியில் வசித்து வந்த  மாறுத்திறனாளியான  முன்னாள் போராளி  ஒருவர்  பாம்பு கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை   பலனின்றி உயிரிழந்துள்ளார்

ஐந்து  பிள்ளைகளின் தந்தையான குறித்த முன்னாள் போராளி  கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை  பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.

இதையடுத்து குறித்த நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16)  இரவு உயிரிழந்துள்ளார்.

பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47) என்ற ஐந்து  பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார் 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *