வேலையினை விட்டு விலகி செல்பவர்களால் ஆளணி பற்றாக்குறை- விவசாய திணைக்களத்தில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து விவசாய போதனாசிரியர்களுக்கான ஆளணி பற்றாக்குறை!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் 10 விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளாரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 விவசாய போதனாசிரியர்கள் பிரிவ காணப்படுகின்றன பெருளவான விவசாயிகள் வயல் செய்கை மற்றும்மேட்டு நில பயிர்செய்கை சிறுதானிய பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் இவ்வாறான விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வு வழங்குவதில் விவசாய திணைக்களத்தினல் ஆழணி பற்றாக்குறையினை எதிர்கொண்டு வருவதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் யாமினி சுசீந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஒன்றில் அபிவிருத்திகுழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களுக்கு இந்த விடையத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
32 விவசாய போதனாசிரியர் பிரிவுகள் காணப்பட்ட போதும் 22 விவசாய போதனாசிரியர்களே காணப்படுகின்றார்கள் இதனால் விவசாய போதனாசிரியர் இரண்டுக்கு மேற்பட்ட விவசாய பிரிவுகளை பார்வையிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவாசாயிகளிடம் இருந்து முறைப்பாடும் கிடைக்கின்றது பொதுவாக பணிகளை விட்டு விலகி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Admin Avatar