28 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள விசுவமடு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதில் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற விசுவமடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகமானது 28 ஆண்டுகளின் பின்னர் 19.06.2024 நடைபெறவுள்ளதுஇந்நிலையில் மகாகும்பாபிஷேக கிரியைகள் (13.06.2024) அதிகாலை 05.15 க்கு ஆரம்பமாகியுள்ளது
கடந்த 1996 ஆம் ஆண்டு ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக பெருவிழா இடம் பெற்றதை தொடர்ந்து யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்குடியேறி இன்று பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குறித்த ஆலயமானது மக்களது பங்களிப்போடு புனராவர்த்தனம் செய்யப்பட்டு இந்த கும்பாபிஷேக பெருவிழா இடம் பெற உள்ளது
அதனடிப்படையில் இன்று கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுவதோடு தொடர்ந்து கிரியைகள் இடம்பெற்று எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு 18.06.2024 செவ்வாய்க்கிழமை காலை 07.00 – மாலை 05.00 வரை நடைபெறவுள்ளதோடு
விசுவமடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையாருக்கான மகா கும்பாபிஷேகமானது (19.06.2024) புதன்கிழமை காலை 06.10 – 06.53 வரையுள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது
எனவே அடியவர்கள் இன்று முதல் தொடர்ச்சியாக இடம்பெறும் கிரிகைகளிலும் விசேட யாக பூசைகளிலும் என்னை காப்பு சாத்தும் வைபவத்திலும் மகா கும்பாபிஷேக பெருவிழாவிலும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்