முல்லைத்தீவில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிக்க ட்ரோன்கள் கமராக்கள் பயன்படுத்தல்!

வடக்கில் இரு மாவட்டங்களில் காடழிப்பினை கட்டுப்படுத்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தல்!

இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாடு வடக்கில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் வனவளத்திணைக்களத்தின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அதிகளவிலான சட்டவிரோதமான தேக்கமரங்கள்,முதிரைமரங்கள்,பாலைமரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன இதனால் இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக

முறிப்பு,தண்ணிமுறிப்பு.கோடாலிக்கல்லு,கரிப்பட்டமுறிப்பு,உடையார்கட்டு,விசுவமடு,மன்னாகண்டல்,முத்தையன்கட்டு,நெட்டாங்கண்டல்,துணுக்காய்,ஜயன்கன்குளம்,கொக்காவில்,பனிக்கன்குளம்,அம்பகாமம்,கரிப்பட்டமுறிப்பு,மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம்,ஒட்டுசுட்டான் போன்ற பிரதேச்ங்களில் உள்ள இயற்கைள வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் பல நூற்றுக்காணக்கான சம்பவங்கள் இடம்பெற்றாலும் சில சம்பவங்களையே பொலீசார் கண்டுள்ளார்கள் பல இடங்களில் பெருமளவான அறுக்கப்பட்ட மரக்குற்றிகள் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களில் கடத்தப்பட்டமை தொடர்பிலும் பல வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணப்படுகின்றன இவ்வாறன நிலையில் பெருமளவான இயற்கை வளத்தினை அழிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கோ கட்டுப்படுத்தவோ பொலீஸ் நிலையங்களில் ஆழணி பற்றாக்குறை காணப்படுவதுடன் வனவளத்திணைக்களத்திடமும் ஆழணி பற்றாக்குறை காணப்படுவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

இவற்றை சாதகமாக பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியாக காடுகளை அழித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

Admin Avatar