முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடுமேற்கு.மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு (13) இன்று நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்ட கனடா மொன்றியலில் வெஸ்ட் ஐலென்ட தமிழ் கலாச்சார சங்கத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பில் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.







