
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உலர் உணவு பொதிகளை வழங்கிவருகின்றார்கள்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கினை தளமாக கொண்டு செயற்படும் சமூதாய முன்னேற்றக்கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு செல்வபுரம் கிராமத்திலும்,கேப்பபிலவு பிலக்குடியிருப்பு கிராமங்களில் சமுதாய முன்னேற்றக்கழகத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சந்திரன் தலைமையில் இந்த உலர் உணவு பொதிகள் கிராம சேவையாளரின் பயனாளிகள் தெரிவிற்கு அமைய இவை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.





