உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் இன்றைய தினம்(12) 2025 டிசம்பர் 12 முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டார்.
இந்த நடமாடும் சேவையில் 1114 பேர் கலந்துகொண்டு பயனடைந்திருந்தனர். இதன்போது அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 419குடும்பங்களுக்கு பெறுமதி வாய்ந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் வறுமையில் கல்வியைத் தொடரும் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு தெரிவுசெய்ப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தம் தொடர்பான மக்களிற்குரிய நிவாரண சேவைகளிற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இன்றைய தினம் மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள்
• வெள்ள அனர்த்த நிவாரண சேவைகள்
• பதிவாளர் நாயகம் திணைக்களம் (காலங்கடந்த பிறப்பு, இறப்பு மற்றும் திருத்தங்கள் ) தொடர்பான சேவைகள்
• மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ( சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் வாகனப் பரிசோதனை ) தொடர்பான சேவைகள்
• ஓய்வூதியம் தொடர்பான சேவைகள்
• சொத்தழிவு காணாமல் போனோர் தொடர்பான சேவைகள்
• நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள்
• காணி தொடர்பான சேவைகள்
• சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள்
• சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள்
• திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள்
• மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்
• விவசாயத் திணைக்களம் தொடர்பான சேவைகள்
• கைத்தொழில் துறை தொடர்பான சேவைகள்
• நுகர்வோர் அதிகார சபையுடன் தொடர்பான சேவைகள்
• சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள்
• மேலும் பல சேவைகள்
இவற்றுடன் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத்திணைக்களத்தின் விசேட மருத்துவமுகாம், விசேட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் உயர் தொழிற்கல்வி வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் கலாசார நிகழ்வுகள் என்பன மிகச்சிறப்பன முறையில் இடம்பெற்றது.
மக்கள் பலர் குறிப்பிட்ட நடமாடும் சேவையில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


