புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு 13.12.2025 இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
காருண்யம் சிறுவர் இல்ல பணிப்பாளர் பாஸ்ரர் பி.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச உதவி பிரதேச செயலாளர் கே.டெனிசியா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் கௌரவ விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியறூபன் ,புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன்,வள்ளிபுனம் சிவில் பாதுகாப்புதிணைக்கள அதிகாரி லெப்ரினன் கேணல் கொணரசிங்க பிரதேச சபை உறுப்பினர் அகிலன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
ஒளிவிழா நிகழ்வின் போது காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் கீழ் உள்ள 287 சிறுவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் நத்தார் பண்டிகை மற்றும் வெள்ள அனர்த்த நிலைகாரணமாக தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம்பெற்றுள்ளது.










