Sunday, December 14, 2025
HomeMULLAITIVUமுத்தையன் கட்டுகுளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்!

முத்தையன் கட்டுகுளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது

தற்போது 23.3 அடியாக காணப்படும் குளத்தின் நீர் மட்டத்தினை 20 அடியாக குறைத்துக்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளார்கள்.இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நீர்பாசன திணைக்கள உதவி பணிப்பாளர் இணைந்து முத்தையங்கட்டு குளத்தை 14.12.35 இன்று நேரில் பார்வையிட்டு,நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மற்றும் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தற்போதைய நிலைமையை ஆய்வு ஆய்யு செய்துள்ளார்கள் இதன்படி குளத்தின் தற்போதைய குளத்தின் நீர்மட்டம் : 23.3 அடியாக காணப்படுகின்றது முத்தையங்கட்டு குளத்தின் முழுக் கொள்ளளவு : 24 அடியாக காணப்படுகின்றது.

ஏற்பட்ட பாதிப்பு
குளத்தின் ஸ்பில்வே-மேலதிக நீர்வழிந்தோடும் பகுதியில் கட்டமைப்பு சேதம் காணப்படுவதால்,
தற்போது அதிக நீர் இருப்பின் காரணமாக அங்கு கான்கிரீட் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும், கனரக வாகனங்களை அந்தப் பகுதிக்கு கொண்டு செல்லவும் முடியாததால், நேற்று மற்றும் நேற்று முன்தினம் திட்டமிடப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எதிர்வரும் மழையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ரேடியல் கதவுகள் மூலம் குளத்தின் நீர்மட்டத்தை 20 அடி வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கனமழை பெய்யும் சூழல் ஏற்பட்டால், வால் பகுதியை வெட்டி கூடுதல் நீரை வெளியேற்றும் மாற்றுத் திட்டமும் தயாராக உள்ளது.மழைக்காலம் முடிந்த பின்னர் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது
ஸ்பில்வே பகுதியை கான்கிரீட் கலவை மூலம் நிரப்புதல் டிரெய்னிங் பண்ட் அமைத்தல்
டிரெய்னிங் பண்ட் மற்றும் ஸ்பில் பகுதியினுள் கற்களை நிரப்பி மண் அரிப்பு குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த நிதற்போது நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்து குளத்தை கண்காணித்து வருகிறது,
எதிர்கால மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு அபாயத்தை குறைக்கும் நோக்கில் இந்த நீர்மட்டக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குளத்தின் கீழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் முத்தையங்கட்டு குளத்தின் அணையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பிரச்சினை ஸ்பில்வே பகுதியில் மட்டுமே உள்ளது அது பெரிய அபாய நிலையை ஏற்படுத்தாது என்பதையும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அறிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments