15.12.2025 இன்று மாலை 6 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, புதுக்குடியிருப்பு காவல் பிரிவின் மூங்கிலாறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது,
ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்தபோது 05 பேரைக் கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் .
மூங்கிலாறு வடக்கு பகுதியில் உள்ள லவன் எனப்டுபவர் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களிடம் இருந்து விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த ஜஸ் போதைப்பொருட்கள்,வாள்கள் சட்டவிரோத பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட பணம் என்பன பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
22 அகவையுடைய பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் 36 அகவையுடை குடும்பஸ்தர்,18 அகவை இளைஞன்,48 அகவையுடை குடும்பஸ்தர் 18 அகவையுடைய இளைஞன் இவர்கள் அனைவரும் மூங்கிலாறு வடக்கினை சேர்ந்தவர்கள்
கைதுசெய்யப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களை நாளை 16.12..2025 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்ட நபர்கள் சான்றுப்பொருட்கள் அனைத்தும் புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
மூங்கிலாறு லவன் குறுப் ஜஸ் வாள்களுடன் கைது!
RELATED ARTICLES
