Monday, April 28, 2025
HomeUncategorizedபுகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரின் அடிமைகளாக! 

புகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரின் அடிமைகளாக! 

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெ.றொஹொன்றாஜ்குமார். 13.04.23 இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி வடக்கு கிழக்கில் உள்ள புகையிரத கடவை காப்பாளர்களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நாடுழுவியரீதியில் 2064 புகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரினால் மூன்றுமாதத்தில் சம்பள அதிகாரிப்பும் ஆறு மாதத்தில் நிதந்தர நியமனமும் வழங்கப்படும் என்ற வஞ்சக வாத்தையால் இணைத்துக்கொள்ளப்பட்ட 668 புகையிரத  கடவைகளில் 2064 ஊழியர்கள் இன்றுவரை பொலீசாரினால் அடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றோம்.

கடந்த ஆண்டுகளை போலவும் இந்த ஆண்டும் ஒரு நாளுக்கு 250 ரூபா வீதம் மாதாந்தம் 7500 ரூபா கொடுப்பனவினை கூட வழங்கமறுத்துள்ள பொலீசாரின் மிலேச்சத்தனமான மனிதநேயமற்ற செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதுடன் பி.ஏ.சி. இல-25 கீழ் 2014 வர்த்தக மானி அறிவித்தலின் படி 180 நாள் அரச சேவையில் கடமையாற்றினால் அந்த சேவையில் நிதந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற சட்டத்திற்க முரணானவிதத்தில் எங்களை தொடர்ச்சியாக புகையிரத திணைக்களத்தின் சேவையினை பெற்றுக்கொண்டு பொலீசார் அடிமைகளாக நடத்திவருகின்றார்கள்.

அதேபோன்று புகையிரத கட்டளை சட்டம் 200 ஆவது அதிகாரம் 32,33 ஆம் பிரிவுகளின் பிரகாரம் புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் எங்களுக்கான நிதந்தர நிமனம் வழங்குவதில் கடமையில் இருந்து தவறியிருக்கின்றார்.

நாடுதழுவியரீதியில் பொலீசாரின்  அச்சுறுத்தல்கள் பழிவாங்கல்கள் போன்ற பல தரப்பட்ட முறைப்பாடுகளை உலகத்தில் எங்குமில்லாதவிடத்தில் இலங்கையில் தொழில் அடிமைகளாக நடத்தப்படுகின்றோம் என்ற முறைப்பாடுகளை இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் செய்தும் அவர்கள் இதனை கண்டுகொள்ளாது இருக்கின்றது 

அதேவேளை தொழில் ஆணையாளர் தொழில்திணைக்களத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்கின்றார்.
இலங்கையில் எங்களுக்கு அடிப்படை மனித உரிமைமீறப்பட்டுள்ளது அடிப்படை தொழிலாளர்களுக்கான உரிமை மீறப்பட்டுள்ளது.
இலங்கையில் புகையிரதகடமை ஊழியர்களுக்கான நீதி நிலைநாட்டப்படாது ஊழலினால் நிறைந்துள்ளது.

இது தொடர்பில் கடந்த காலங்களில் ஜனாதிபதி,போக்குவரத்து அமைச்சர்,பிரதமர் போன்றோருரிடமும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் புகையிரத திணைக்களத்துடனும் கலந்துரையாடல் நடத்தி பேச்சுக்களை நடத்தி எங்களையம் ஏதோ ஓருவகையில் இணைத்துக்கொள்ளுங்கள் என பலதரப்பட்ட விதத்தில் கோரிக்கை முன்வைத்தோம் ஆனால் இந்த அரசாங்கம் இன்றுவரை மௌனம் சாதித்து வருகின்றது.

கடந்த காலங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விபத்துக்கள் 600ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன எங்கள் நாட்டின் மிகப்பெறுமதி மிக்க உயிர்களை காவுகொடுத்துள்ளோம் அன்றில் இருந்து இன்று வரை பொலீசாரின் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அர்பணிப்பான  சேவையினை வழங்கிவருகின்றோம் இவ்வாறு வழங்கிவரும் ஊழியர்களின் உயிர்களுக்கு உத்தரவாம் இல்லை பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இனிமையான சித்திரை புத்தாண்டினை கொண்டாட எதிர்பார்த்திருந்த எங்கள் ஊழியர்கள் பொலீசாரினால் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி போன்ற பகுதிகளிலும் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் எங்கள் ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்கப்படாது இருக்கின்றது.

அந்தந்த பொலீஸ் பிரிவுகளில் பொலீஸ் பொறுப்பதிகாரிகளின் கையிருப்பாக இருக்குக்கூடிய பணத்தினை ஊழியர்களின் சம்பளமாக பெற்றுத்தரவேண்டும் என பகிரங்க கோரிக்கையினை முன்வைக்கின்றோம் அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில்
கடந்தகாலங்களில் நாங்கள் தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போது எத்தனை பாரதூரமான விபத்துக்கள் ஏற்பட்டன பாரதூரமான பின்விளைவுகளுக்கு இந்த அரசாங்கம் முகம் கொடுக்நேரிட்டது என்பதை நினைவுபடுத்துவதுடன் நாடு தழுவியரீதியில் பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்வோம் என்பதை பகிரங்கமாக அறிவித்து நிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான நாடு தழுவியரீதியில் 668 கடவைகளில் 2064 ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு பொலீசாரின் கீழ் அடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றார்கள்.

இதன்போது வடக்கு கிழக்கில் உள்ள 2064 புகையிரத கடவை காப்பாளர்களுக்குரிய சம்பளம்பிரச்சினை தொடர்பில் கதைத்துள்ளார்.
250 ரூபா சம்பளத்தில் பொலீசார் அடிமைகளாக கடந்த பத்து ஆண்டுகளாக நடத்திவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறையாவது சிதி;ரைபுத்தாண்டினை சிறப்பாக கொண்டாலாம் என்ற எங்கள் ஊழியர்கள் பொலீசாரால் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் கிளிநொச்சி,யாழ்ப்பாணமாவட்ட ஊழியர்களுக்கும் நாட்டின் ஏனையப பகுதி ஊழியர்களுக்கு  சம்பளம் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தந்த பொலீஸ் பிரிவுகளில் பொலீஸ் பொறுப்பதிகாரிகளின் கையிருப்பாக இருக்குக்கூடிய பணத்தினை ஊழியர்களின் சம்பளமாக பெற்றுத்தரவேண்டும் என பகிரங்க கோரிக்கை
கடந்தகாலங்களில் நாங்கள் தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போது எத்தனை பாரதூரமான விபத்துக்கள் ஏற்பட்டன என்பதை நினைவுபடுத்துவதுடன் நாடு தழுவியரீதியில் பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்வோம் என்பதை பகிரங்கமாக அறிவித்து நிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments