முல்லைத்தீவில் கடற்படையினர் உயிரிழப்பு!


முல்லைத்தீவு கோட்டபாய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படையினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளையினை சேர்ந்த குறித்த கடற்படையினன் முல்லைத்தீவு கோட்டபாய கடற்படைத்தளத்தில் பணியாற்றி வந்துள்ளார் இவர் 15.04.23 அன்று தூக்கத்திற்கு சென்றவர் உயிரிழந்த நிலையில் 16.04.23 இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரோத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரோத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *