தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மேடை என்னும் நிகழ்வு மார்ச் 12 அமைப்பினரால் தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மேடை எனும் நிகழ்வு நடைபெற்றது
பாராளுமன்ற உறுப்பினர் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும் மேடை நாடெங்கும் மார்ச் 12 அமைப்பினரால் நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் 22 ஆவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும் மக்கள் மேடையொன்று (29.05.2024) இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் மேடை நிகழ்ச்சியில் முல்லைதீவு மாவட்டத்தில் 6 கட்சிகளது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் ஆனால் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிகழ்வில் கட்சிகளின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளும் கட்சி அரசியல் செயற்பாடுகள் மற்றும் தமிழ்தேசிய கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் என்பன முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் தமிழ்தேசிய கட்சிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுகின்றது ஆழும் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் மக்கள் மத்தியில் அரசயில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் அரசியலுக்காக ஒன்றிணைய முடியாத நிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது.