முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை தடுத்தல் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி மற்றும் களப்பு மீன்பிடிகளில் சட்டவிரோத மீன்பிடியை தடுத்தல் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தற்போதைய கள நிலமைகளை ஆராயும் பொருட்டு விசேட மீளாய்வுக் கூட்டம் (29.05.24) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் தலைமையில் பி.ப 2.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பது தொடர்பான விடயத்தில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பவர்களை கட்டுப்படுத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கா.மோகனகுமார், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் , மீனவ சங்கம் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.