Tuesday, April 29, 2025
HomeUncategorizedஆயர் இல்லம் விற்ற காணியால் மீனவர்கள்-தனியார் கொட்டல்காரர்களுக்கிடையில் முறுகல்!

ஆயர் இல்லம் விற்ற காணியால் மீனவர்கள்-தனியார் கொட்டல்காரர்களுக்கிடையில் முறுகல்!

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் தியோநகர் மீனவர்கள் நேற்று (26.05.2024) இரவிலிருந்து தொடர் போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில  தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது.

குறித்த  வீதியூடாக மீன்பிடிக்கு செல்ல முற்பட்ட மீனவர்கள் வீதியானது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தியோ நகர் மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள், வேலிகளை அகற்றியுள்ளனர்.

 இது குறித்து குறித்த பகுதி மக்கள் கூறும் போது குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார்  நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தமது வளங்களை சுரண்டி வருவதாகவும்  கூறியிருந்தனர்.

அத்ணோடு தமது  மீன்பிடிப்படகுகள் வலைகளை உள்ளே வைத்தே வேலைக்கு செல்லும்  பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை என்றும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரும் உரிய முறையில் தீர்வினை வழங்கவில்லை என்றும் தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் குறித்த இடத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலப்பகுதி முன்னர் யாழ் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகள் காணப்பட்டுள்ளன  கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் ஆயர் இல்லம் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு தனது சொந்தக் காணியான கடற்கரை உள்ளிட்ட அண்ணளவாக 130 ஏக்கர் வரையான கரையோர பகுதிவிற்பனை செய்துள்ளார்கள்.

யாழ் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான நிலப்பகுதிக்குள் கடல் வந்துவிட்டது அது அவர்களின் வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்த நிலையில் குறித்த தனியார் நிறுவனம் தனது பகுதிகளை எல்லைப்படுத்தும் போது அவ்வபோது மீனவர்களுக்கும் தனியார் நிறுவனத்தினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது

கிழக்கில் திருகோணமலை நிலாவெளி போன்ற பகுதிகளில் காணப்படும் கொட்டல்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றார்கள் ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில் எந்த சுற்றுலா கொட்டல்களும் இல்லை என்பது கவலையளிக்கின்றது

முல்லைத்தீவு மாவட்டம் 74 கிலோமீற்றர் தூரம் கொண்ட கடற்கரை காணப்படுகின்றது மக்களின் பொழுதுபோக்கிற்கான சுற்றுலா கடற்கரைகூட சரியான ஒன்று இல்லை எவ்வாறு இந்த மாவட்டம் அபிவிருத்தி அடையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறுபக்கத்தில் மீனவர்கள் தொழில் செய்வதற்கு ஏற்றவகையிலான இடத்தினை நிர்வகித்து கொடுக்கவேண்டியது அரச திணைக்களங்களின் கடமையல்லவா இந்த மீனவர்களின் பிரச்சினை தீர்;த்துவைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது இதன் உண்மைத்தன்மையினையும் காணிதொடர்பிலான தகவல்களையும் அரச திணைக்கள அதிகாரிகள் உடன் தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments