Saturday, September 13, 2025
HomeUncategorizedரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் தாக்கம்!

ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் தாக்கம்!

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு தோல்விப்பயம் இருப்பதால் ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடமாட்டார் என்கின்றனர்முன்கூட்டி அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை – உரிய நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத் தூண்கள் எம்முடன் இணையும்ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நாலக கொடஹேவா, ஜிஏஎல் போன்ற வியத்மக உறுப்பினர்கள் பிடித்துள்ளனர்-தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார.

ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதானது ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளுக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதனால் சஜித் பிரேமதாச பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை வைத்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை தற்போது நாலக கொடஹேவாவும் ஜி.எல். பீரிஸ் போன்ற மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (21) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்கிரிகல தொகுதி அமைப்பாளர் நிமல் பிரான்சிஸ்கோ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார். அது தொடர்பிலும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்

“ஐக்கிய மக்கள் சக்தியை இன்று கைப்பெற்றி வைத்திருப்பது நாட்டைத் சீரழித்து கோட்டாபய ராஜபக்சவை இல்லாதொழித்த வியத் கம உறுப்பினர்கள், கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன மூலம் தேர்தலில் போட்டியிட்டு 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதன் பின்னர், நாடு நெருக்கடி நிலையயை அடைவதற்கு தவறான ஆலோசனை வழங்கியதும் இவர்களே. ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவிற்கு இன்று இடமில்லை.

நேற்று (20) சஜித் பிரேமதாச கட்சியின் உறுப்பினர்கள் குழுவிற்கு இரவு விருந்தொன்றை வழங்கினார். வசந்த பண்டார, ஜி.எல். பீரிஸ், ரஞ்சித் மதுமபண்டார , லக்ஸ்மன் கிரியெல்ல, திலீப், கயந்த, மயந்த, சஞ்சய், அலவத்துவல, கபீர், எரான் ஆகியோர்கள் வருகைதந்து இருத்தனர் . கபீர், எரான் ஆகியோரின் பொருளாதாரக் கொள்கை மாறுபட்டவை என்பதனால் அவர்கள் இங்கு இருக்க தகுதியற்றவர்கள் .
எனவே ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது இருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கையல்ல. மாறாக நாலக கொடஹேவா, ஜி.எல். பீரிஸின் பொருளாதாரக் கொள்கை தான் உள்ளது.

தற்போது எம்.பி.க்கள் பலர் எங்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். மே தினத்தில் ஏன் இணைத்துகொள்ள வில்லை என சிலர் கேட்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு காலம் உண்டு அதற்கு அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. உரிய நேரத்தில் அவை நடக்கும்.

ஏனெனில் சிலர் தேர்தல் பிரசாரங்களை முன்னதாகவே ஆரம்பித்து களமிறங்கும் நிலையில் உள்ளனர். நூற்றுக்கு 03 வீதமாக வீழ்ச்சியடையும் பயணம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் காலங்களில் எங்களுடன் இணைந்து கொள்ள கலந்துரையாடி வருகின்றனர்.

இந்த ஒவ்வெரு குழுக்களும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வழியில் இணைத்துக்கொள்ளும் அதனால் தான் சஜித் பிரேமதாசவிடம் இதனை செய்ய வேண்டாம் என கட்சியை கொண்டு செல்ல முயற்சிப்பவர்களும் உள்ளனர். அதற்கு சஜித் பிரேமதாச செவிசாய்க்காவிட்டால் தனித்தனியாக எம்முடன் இணைய தயார். அதற்கான ஒத்திகையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்ட நிமல் பிரான்சிஸ்கோ ஐக்கிய மக்கள் சக்தியின் முல்கிரிகல தொகுதி அமைப்பாளர் இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வெற்றிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்;

“தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எதிகொள்ள வேண்டியுள்ளது.அதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

ரணிலை ஜனாதிபதியாக்க ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராகி வருகிறோம். தற்போது சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் உருவாகி வருகின்றன.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கூறுகிறது.

ரணில் விக்கிரமசிங்க பலமாக வந்து ​​ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, ​​ஐக்கிய தேசியக் கட்சியின் மரண அடியாக அமையும் என்பது ஐக்கிய மக்கள் சக்திக்கு தெரியும்.

அதனால்தான் சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினரைப் பாதுகாக்கும் முயற்சியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நாட்டைப் பற்றிய அவர்களின் விருப்பமான பார்வையை நோக்கி நகரும் போது கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைகின்றனர். ரணில் விக்கிரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப விரும்புகிறார்.
வீடுகளுக்கு தீ வைக்கும் போது,பொறுப்பை ஏற்க முடியாது என்று கூறியதும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக அனை பொறுப்புகளை ஏற்க முடியாது என்று கூறும் போது, ​​நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி பதவியை ஏற்று நாட்டையே மாற்றினார் .

அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். அதன் பிறகு பலர் வந்து இணையலாம். ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே தேசிய வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்.

நாட்டுக்காக அரசியல் செய்யும் அனைவரையும் ஒன்றிணைத்து வெற்றியுடன் முன்னேறிச் செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் தயார் செய்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments