Tuesday, April 29, 2025
HomeUncategorizedஉயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி!

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி!

உயிர்நீத்த உறவுகளுக்காக  நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18.05.2024) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்று சனிக்கிழமை நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்

குறித்த அஞ்சலியின் பின்னர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூக செயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments