Wednesday, April 30, 2025
HomeUncategorizedமுள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம்!

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம்!

2009 ஆம் ஆண்டு இறுதிப்போர் காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard கலந்துகொண்டு இறுதிபோரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

18.05.2024 இன்று முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் பிரடனம் வாசிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் சிறப்பாக சர்வதேச மன்னிப்புச்சபையில் செயாலளர் நாயகம் Agnès Callamard  கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செய்துள்ளார்

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments