Monday, April 28, 2025
HomeUncategorizedவள்ளிபுனம் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலம்!

வள்ளிபுனம் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குளத்தின் கரையில் இவரின் மீதிவண்டி மற்றும் செருப்பு, சறம்என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஹேரத் குளத்தில் இறங்கி உடலத்தினை மீட்டு எடுத்துள்ளார்.

உடலம் நாளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதியின் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகைள புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருவதாககவும் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments