இலங்கையின் மூத்த மற்றும் ஆழுமைகொண்ட தமிழ் ஊடகவியலாளர் இயற்கையெய்தினார்!


இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார்.

ஊடக ஆளுமை இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் 77 வது வயதில் இன்று புதன்கிழமை(12) அதிகாலை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

BBC Tamil  மாணிக்கவாசகர் அவர்கள்  எல்லோராலும் அறியப்பட்ட ஊடகப் பொக்கிசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மற்றும் சமாதான கால நெருக்கடியான சூழ் நிலைகளிலும் சர்வதேசத்திற்கு தமிழர்களின் உரிமை பிரச்சனைகள் தொடர்பில் தொடர்ந்து எடுத்துரைத்து வந்திருந்தார்.

அவரின் இறுதிக்கிரியைகள் 13.04.2023 நாளை வியாழக்கிழமை 10 ம் ஒழுங்கை வைரவபுளியங்குளத்திலுள்ள அவரின் இல்லத்தில் காலை 9 மணிக்கு இடம்பெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் தட்சநாதன்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அவரின் குடும்பத்தினர் அறிய தந்துள்ளனர்.

இந்நேரத்தில்  மதிப்புக்குறிய பி. மாணிக்கவாசகம் அவர்களுக்கு Voice of mullai தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்தோடு அவரின் குகும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *