புதுக்குடியிருப்பு இளைஞன் உள்ளிட்ட நால்வர் கப்பலேறி அமெரிக்கா செல்லமுயற்சி!


ஊழியர்கள் போல மாறுவேடமிட்டு கப்பலேறி அமெரிக்கா செல்ல முயன்ற நான்கு இளைஞர்கள்களை கப்பல் அதிகாரிகள் இனம் கண்டு பிடித்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இரகசியமான முறையில் கப்பல் ஒன்றில் ஏறியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள், கப்பல் சூயஸ் கால்வாயை கடந்துகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி இவர்கள் கப்பலில் ஏறியுள்ளார்கள் இவர்கள் கப்பல் ஊழியர்களாக மாறுவேடத்தில் இருந்துள்ளார்கள்.

அங்கிருந்து இவர்கள் சீனா நாட்டுக்கப்பல் ஒன்றின் ஊடாக இலங்கையின் கடல் எல்லைக்குள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார்கள்.

இலங்கை பொலிஸாரிடம் நேற்று (10) ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞர்கள், காலி பதில் நீதவான் பிரேமரத்ன திரானகம முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் முல்லைத்தீவு,சுண்ணாகம், ஊர்காவல்துறை, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் எவ்வாறு கப்பலில் ஏறினார்கள் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவரும் இதில் அடங்குவதாக தெரியவந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *