ஓட்டிசுட்டான் பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் ஒரிவரின் பழிவாங்கல் நடவடிக்கையால் இளைஞன் பாதிப்பு!
முல்லைத்தீவு முத்தையன் கட்டு பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீதான தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியேகத்தர் ஒருவர் இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தி பொலீஸ் சிறையில் அடைத்துவைத்துள்ள சம்பமவ் ஒன்று 09.04.23 அன்று பதிவாகியுள்ளது.
முத்தையன் கட்டு பகுதியினை சேர்ந்த விவசாயம் மற்றும் வியாபாரம் செய்துவரும் இளைஞன் தனது வாகனத்தினை பொருட்கள் ஏற்றுவதற்காக ஒட்டுசுட்டான் சந்திப்பகுதிக்கு கொண்டு சென்று அங்கு சாரதியிடம் வாகனத்தினை கொடுத்துவிட்டு தனது நண்பர் ஒருவருடன் முத்தையன் கட்டு நோக்கி கடந்த 09.04.23 அன்று திரும்பிசெல்லும் போது வீதியில் வழிமறித்த பொலீசார் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் காச்சட்டையில் இருந்த ஒரு இலட்சம் ரூபா பணத்தினை கைவிட்டு எடுத்துள்ளார்கள்
இதன்போது பொலீசாரிடம் பணத்தினை எடுக்காதிர்கள் என்ன வேணும் என்று கேழுங்கள் என்று சொல்லுங்கள் தல்லாம் என்று சொல்லிவிட்டு தனது கையடக்க தொலைபேசியில் படம் எ டுத்தவேளை போணினை பறித்த பொலீசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் நீ குடித்து இருக்கின்றாய் என சொல்லி வாகனத்தில் ஏறு என சொல்லியுள்ளார்கள்.
எந்த வித குற்றமும் செய்யாத இருவரையும் பொலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள் இந்த சம்பவம் நடக்கும் போது இரவு 8.30 மணி
பொலீஸ் நிலையம் கொண்டுசென்றபோது அங்கும் 80633 இலக்கம் கொண்ட பொலீஸ் உத்தியோகத்தர் பொலீஸ் நிலையத்திலும் வைத்து தன்மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பொலீஸ் நிலையத்திற்கு உள்ளே கொண்டு சென்றும்தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
தனகும் அவருக்கும் ஏற்கனவே வழக்கு தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாகவம் இது தன்னை தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் குறித்த இலக்கம் கொண்ட பொலீசார் பொய்யான குற்றச்சாட்டுக்களை சொல்லி தன்மீது தாக்குதல் நடத்தியதுடன் பொலீஸ் சிறையில் அடைத்துள்ளார் அங்கும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்
பொலீஸ் சிறையில் அடைத்துவைத்துக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டினை எழுதிவிட்டு பொலீஸ் அடித்தது பணம் பறித்தது என்று எதுவும் இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் பொய் குற்றச்சாட்டினை எழுதி கையெழுத்து வைக்கசொல்லி வற்புறுத்தியவேளை அவர் அதில் கையெழுத்து வைக்காத நிலை காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளதுடன் எந்த காரணம் இன்றி தன்மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ஏதோ பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவன் போல் கைரேகையினையும் பதிவுசெய்துகொண்டுள்ளார்
இதனால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொலீசாரின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளதுடன்
சட்டத்தரணி ஊடாக பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேரில் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் சட்டத்தரணி கதைத்ததன் காரணத்தினால் குறித்த நபர் 10.04.2023 மாலை பொலீசாரல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தன்னிடம் பறித்த ஒரு இலட்சம் ரூபா பணத்தில் 60 ஆயிரம் வரையான பணத்தினையே மீள பொலீசார் ஒப்படைத்துள்ளார்கள் என்றும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு குற்றம் இல்லாதவர்களை பொலீஸ் வலையின் சிக்கவைத்து அவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் இந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஈடுபட்டு வுருகின்றமை கவலையளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.