வடமராட்சி கிழக்கில் பொலீசார் துப்பாக்கி சூடு பெண் காயம்!


முதற்கட்ட தகவல்
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கட்டுப்படுத்துவற்காக வடமராட்சி கிழக்கு பொலீசார் சென்றவேளை சட்டவிரோத மதுபான விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு பகுதிக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது இதன்போது பொலீசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் ; காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத மதுபானை விற்பனை தொடர்பில் சிவில் உடையில் விசாரிப்பதற்காக சென்ற பொலீசார் அந்த பிரதேச இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த சம்பத்தினை தொடர்ந்து இளைஞர்களும் பொலீசர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன் பின்னர் துப்பாக்கிகளுடன் இளைஞர்களை தேடி வீடு சென்ற பொலீசார்
இந்த சம்பத்தினை தொடர்ந்து இன்று இரவு 7.30 மணியளவில் சிவில் உடைதரித்த பொலீசார் மற்றும் பொலீஸ் உடை தரித்த 10 வரையான பொலீசார் குறித்த வீட்டிற்குள் புகுந்தவேளை வீட்டில் இருந்த பெண்கள் குடும்ப தலைவர்கள் இளைஞர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் பொலீசார் சுமார் 15 வரையான துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளார்கள் இதன்போது பெண் ஒருவர் தலையில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றார்கள்.
வீட்டில் இருந்த தாய் மற்றும் தந்தை ஆகியோர் பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் காயமடைந்த பெண் சிகிச்சைக்கா மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *