புதுக்குடியிருப்பில் 35 இலட்சத்திற்கு போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய வெலிஓயா வாசி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வெலிஓயா பகுதியில் வசிக்கும் ஒருவர் 35 இலட்சத்தி 25ஆயிரம் ரூபாவிற்கு 1470 போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த 52 அகவையுடைய நபர் கடந்த மாதம் 21.03.23 அன்று  முல்லைத்தீவு பகுதியில் போலி தங்க முத்துக்களைவவிற்பனை செய்ய முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இன்னிலையில் இவரிடம் 35 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபா பணத்தினை கொடுத்து போலி தங்க முத்துக்களை வாங்கி ஏமாறிய மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 22.03.23 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் 24.03.2023 அன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு எதிர்வரும் 11.04.23 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரிவட்டுள்ளது.

இதன்போது  நீதி மன்ற உத்தரவிற்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ர பொலீஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலீஸ் அத்தியட்சகர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூங்கிலாற்று பகுதியில் 35 இலட்சம் வரையான பணத்தினை வாங்கியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து 06.04.23 அன்று அந்த சிறைச்சாலையில் இருந்த நபரை அவது வாழ் இடத்திற்கு அழைத்து சென்று  பணத்தில் ஒரு தொகுதியினை மீட்டுள்ளார்கள்.

வெலிஓயா பகுதியில் அவரது வீட்டிற்கு அருகில் இன்னெருவரின் வீட்டில் மண் பானைக்குள் மறைத்து வைத்துள்ள நிலையில் மீட்டுள்ளார்கள்.

இதன்போது 18 இலட்சத்தி  30 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணம் நீதிமன்றில் ஒப்படைக்கும் நடவடிக்கையும் குறித்த வழக்கு தொடர்பான விசாரணையினையும் புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Tagged in :

Admin Avatar