கலைமகள்வித்தியாலயம் உள்ளிட்ட 6 பாடசாலைகளுக்கு அதிபர்கள் விண்ணப்ப கோரிக்கை!


முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை கல்வி வயத்தில் 6 பாடசாலைகளுக்கான அதிபர்கள் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான அதிபர்கள் விண்ணப்ப கோரிக்கை முல்லை வலயக்கல்வி பணிமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் நிலை..
கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான கோரிக்கை ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 5 அதிபர்கள் விண்ணப்பித்து நேர்முக தேர்விற்கு இரண்டு அதிபர்கள் கலந்து கொண்டு அதில் ஒரு அதிபர் அதிக புள்ளிகளை பெற்று தெரிவான நிலையில் அவருக்கான நியமன கடிதம் வலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அந்தஅதிபர் தனது பாடசாலையினை விட்டு கலைமகள் வித்தியாலயத்திற்கு செல்லாத நிலையில் இழுத்தடிப்பினை மேற்கொண்டு தான் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுவரை அதிபர் இல்லாத நிலையில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் காணப்பட்டுள்ளது நல்ல அதிபர் வருவார் என திர்பார்த்த பெற்றோர்களுக்கு ஏமாற்றமே காணப்பட்டுள்ளது

இந்த நிலையில் மீண்டும் முல்லை கல்விலயம் கடந்த 03.04.2023 அன்று அதிபர்கள் வெற்றிடங்களுக்கான விண்ணப்பக்கோரலினை விடுத்துள்ளது அதில் கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட முல்லை வலயத்தின் வகை -2 இனையுடைய தரத்தினை 6 பாடசாலைகளுக்கு இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தராம் 2 அதிபர்களிடம் இந்த விண்ணப்ப கோரிக்கை விடு;க்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் எதிர்வரும் 17.04.2023 ஆம் திகதிக்கு முன்னர் வலயத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றும் வலயத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *