தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு கழகங்களினால் பல்வேறு இடங்களில் தொடர் போட்டிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டினை ஊக்கிவி;க்கும்நோக்கில் புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும் விளையாட்டு துறை மற்றும் கழகங்களின் பங்களிப்புடனும் விளையாட்டு போட்டிகள் மற்றும் மாண்டுவண்டில் சவாரிபோட்டி படகு போட்டி என்பன நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
08.03.2023 நாளை சனிக்கிழமை தொடக்கம் இந்த விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினரின் ஏற்பாட்டில் கண்ணகி மாட்டுவண்டில் சவாரிதிடல் அருகில் நந்திக்கடலில் காலை 10.00 மணிக்கு படகு போட்டியும் மாலை 1.00 மணிக்கு மாட்டுவண்டில் சவாரி போட்டியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளவேளைவித்தியா விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்படும் மாபெரும் முல்லையின் சித்திரை புதுவருட விளையாட்டு விழாவும் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு மிதிவண்டி போட்டியுடன் தொடங்கவுள்ளது
ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு மரதன் ஓட்டப்போட்டியும் அதனை தொடர்ந்து போட்டிகளும் நடைபெறவுள்ளதுடன்
சித்திரைப்புத்தாண்டு நாளான 14 ஆம் நாள் வற்றாப்பளை மங்களேஸ்வரா விளையாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடத்தும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழா 03 ஆம் கட்டை நந்திக்கடல் வெளியில் சிறப்புற நடைபெறவுள்ளது.
இதில் மரதன் ஓட்டம்,துவிச்சக்கர வண்டிஓட்டம்.ஊழவியந்திரம் பெட்டிகொழுவி பின்னோக்கி செல்லல்,மாட்டுவண்டில் சவாரி என்பன சிறப்பாக நடைபெறவுள்ளன.
இதேவேளை குமுழமுனை ஜக்கிய விளையாட்டு கழகம் நடத்தும் முமுழமுனை மற்றும் ஆறுமுகத்தான்குள வீரர்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் விளையாட்டு போட்டிகளுடன் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி மற்றும் மரதன் ஓட்டப்போட்டி என்பன சிறப்பாக எதிர்வரும் 14.04.2023 அன்று குமுழமுனையில் நடைபெறவுள்ளது.