Monday, April 28, 2025
HomeUncategorizedகலைமகள் வித்தியாலயம் நிரப்பப்படாத அதிபர் வெற்றிடம்!

கலைமகள் வித்தியாலயம் நிரப்பப்படாத அதிபர் வெற்றிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்விவலயத்தின் கீழ் உள்ள முள்ளியவளை கலைமகள் வித்தயாலயத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக அதிர் இல்லாத நிலைதொடர்ந்து வருகின்றது.

2022 ஆம்ஆண்டு அதிபராக இருந்தவர் 31.012.2022 அன்று ஓய்வு பெற்ற நிலையில் இதுவரை பாடசாலைக்கான அதிபர் நியமிக்கப்படவில்லை 650 வரையான மாணவர்களை கொண்டு தரம் 11 வரை இயங்கிவரும் இந்த பாடசலையில் 45 வரையான ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றார்கள் அதிபர் இல்லாத நிலைகாணப்படுவமாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

போரால் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பெறுபேறு அடிப்படையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரும் பாடசாலைகளில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயமும் ஒன்றாக காணப்படுகின்றது.

பாடசாலை நிர்வாகத்தினை கொண்டு நடத்துவதற்கு சரியான அதிபர் தேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் இந்த பாடசாலைக்கான அதிபர் முல்லை வலயத்தினால் இதுவரை நியமிக்கப்படவில்லைஇந்த நிலையில் அதிபர் நியமிப்பு தொடர்பில் வலயம் பின்னடிக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வலயத்தினால் குறித்த பாடசாலைக்கான அதிபரை நிமிப்பதற்கான அதிபர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த 14.12.2023 கோரப்பட்ட போதும் அதில் கலந்துகொண்ட அதிபரை இதுவுரை நியமிக்காத நிலையில் வலயம் காணப்படுகின்றது.

அன்றைய நிலையில் கலைமகள் வித்தியாலயத்திற்கு 5 அதிபர்கள் விண்ணப்பித்திருந்தார்கள் ஆனால் இரண்டு அதிபர்களே நேர்முகதேர்வுக்கு சென்றிருந்தார்கள் கலைமகள் வித்தியாலத்தில் அதிபர் தரம்- 2 இனை கொண்டவராகவே இருத்தல் வேண்டும் என விண்ணப்பதாரிகளிடம் கோரப்பட்ட போதும் அதிபர் தரம் -2 இனை கொண்ட அதிபர் ஒருவர் நேரர்முக தேர்விற்கு சென்றும் இதுவரை அந்த அதிபரை நியமிக்காமை பெற்றோர்கள் வலயம் தொடர்பில் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

முல்லை வலயத்தின் இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது பலரின் கருத்தாக காணப்பட்டாலும் ஏன் நேர்முக தேர்வுக்கு தோற்றிய அதிபரிக்கு அனுமதிவழங்கப்படவில்லை இதன் பின்புலத்தில் அரசியல்  காரணம் இருக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிபர்களை உள்வாங்கும் நடவடிக்கையில் முல்லை வலயக்கல்விப்பணிப்பாளர் ஈடுபட்டுள்ளாரா என்ற கேள்வியும் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மீண்டும் கலைமகள் வித்தியாலய பாடசாலையின் தரம் 2 அதிபருக்கான வெற்றிடத்திற்கான விண்ணப்பம் முல்லை வலயத்தினால் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறிப்பா யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா மாவட்டங்களில் உள்ள வலயங்களுக்கு முல்லை வலயத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முல்லை வலயத்திற்குள்  பணியாற்றும் அதிபர் தரம் 2 இனை கொண்ட அதிபர் விண்ணப்பித்தும் வலயம் இதுவரை அவரை ஏற்றுக்கொள்ளவில்லை வலயத்தின் இவ்வாறான நடவடிக்கைக்கு பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன் துரிதகதியில் கலைமகள் வித்தியாலயத்திற்கான அதிபரை நியமிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments