வடக்கில் நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று தமிழில்பெயர்வைக்கும் குடும்பத்தினருக்கு அவர்களின் குடும்ப வாழ்க்கை செலவுக்காக ஊக்கத்தொகை வழங்கும் நடவடிக்கை ஒன்றினை சைவ மகாசபை ஆரம்பித்துவைத்துள்ளது
பங்குனி உத்தரநாளான நேற்று இந்த திட்டம் மீள தொடக்கிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைவ மகாசபையினால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் சிறிது காலம் தடைப்பட்டிருந்தது இந்தநிலையில் மீண்டும் இந்த நடவடிக்கை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளின் பின்னர் கேள்விக்குறியாகும் தமிழர்களின் வீகிதாசாரம்..
வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள தமிழ்மக்களின் பிறப்பு வீதம் அதிகளவில் குறைவநைந்துள்ள நிலையில் தமிழர்களின் வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழர்களின் வீகிதாசாரத்தினை அதிகரிக்கவேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள இளம் குடும்பங்கள் கண்டிப்பாக நான்கு பிள்ளைகளை இந்த நாட்டிற்காக பெறவேண்டிய நிர்பந்த்ததினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாது ஒரு பிள்ளையுடனேயே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் தாக்கம் இன்னம் பத்து ஆண்டுகள் கடந்த பின்னர்தான் உணரமுடியும் ஏன் ஏன்றால் தற்போதே வடக்கு மாகாணத்தில் பல ஆரம்ப பாடசாலைகள் முடப்பட்டு வருகின்றன ஆரம்ப பாடசாலைகளுக்கான சிறுவர்கள் பற்றாக்குறை இது பிறப்பு வீதத்தினை காட்டி நிக்கின்றது.
இளம் குடும்பங்ளுக்கு பொருளாதாரரீதியில் மற்றும் உதவிகளை மேற்கொண்டு பிறப்பு வீதத்தினை அதிகரிக்க செய்யவேண்டியது நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்கள் மறறும் சமூகசேவை செயற்பாட்டாளர்களும் புலம்பெயர்ந்தவர்களும் மேற்கொள்ளவேண்டும் என சமூக அக்கறையுடன் வேண்டுகின்றோம்.