முல்லைத்தீவு மூன்று முறிப்பு பகுதியில் வயோதிபரின் உடலம் மீட்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு குதியில் வயோதிபரின் உடலம் ஒன்று இன்று 05.04.23 மீட்கப்பட்டுள்ளது

மூன்று முறிப்பு பகுதியில் மாடு மேய்பதற்காக சென்றவர்களால் வயல் வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்ட வேளை நெட்டாங்கண்டால் பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள்.

இதன்போது வவனியா முள்ளிக்களும் பகுதியினை சேர்ந்த 70 அகவையுடைய நபர் என தெரியவந்துள்ளது மேலதிக விசாரணைகளை நெட்டாங்கண்டல் பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *