யாழ் சிறுவர் இல்ல விவகாரம் அருட்சகோதரிகள் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!


யுhழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமன முறையில் சிறுவர் இல்லமொன்றை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அருட்சகோதரிகள் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

இருபாலை பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளமைக்கான காரணம் மூன்று சிறுமிகள் தப்பியோடியுள்ளார்கள். இதன்போதோ இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளது.

சிறுவர் இல்லம் தொடர்பில் வெளியான தகல்.
கடந்த வடமாகாண சபை ஆட்சி காலத்தின் போது, கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான தங்குமிடம் என பதிவு செய்யப்பட்டு சிறுவர் இல்லமாக இது நடாத்தப்பட்டு வந்துள்ளது.

சிறுவர் இல்லத்திற்கான அனுமதிகள் எவையும் பெறப்படவில்லை. இதேபோன்று மற்றுமொரு சிறுவர் இல்லம் அதனருகில் நடாத்தப்படுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்தவ சபையின் கீழ் இரு சிறுவர் இல்லம் கிளிநொச்சியில் நடாத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. சிறுவர் இல்லங்களுக்கான அனுமதிகள் உரிய முறையில் பெறப்பட்டுள்ளனவா? அங்குள்ள சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா? போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *