முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் முக்கிய சிகிச்சை பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மாவட்ட மருத்துவமனைக்கு 50 வைத்தியர்களுக்கான தேவைகள் உள்ள நிலையில் 30 வைத்தியர்களே கடமையில் இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு துறைகளிலும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுகின்றது சிறுவர் வைத்தியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் பெண்களுக்கான சிறப்பு வைத்தியர்கள் இல்லாத நிலையினால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இங்கு சிகிச்சை பெறவரும் சிறுவர்கள் மற்றும் ஏனையர்கள் பலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவிற்கு அனுப்பிவைக்கப்படும் நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.