யாழில் அனுமதியற்ற சிறுவர் இல்லம்14 சிறுமிகள்மீட்பு-முல்லைத்தீவிலும் உள்ளதாம்!


இலங்கையின் வடக்கில் சில இடங்களில் அனுமதியற்ற சிறுவர் இல்லங்கள் இயங்கிவருகின்றன இவற்றை கட்டுப்படுத்த திணைக்கள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் இருபாலையில் சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 14 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே இவர்கள் என்றும் அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வறான சிறுவர்கள் இல்லம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்திலம் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனுமதியற்ற சிறுவர் இல்லம் இயங்குவதாக முகநூல் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *