இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்சியாக பௌத்த மேலாதிக்க சக்தியினர் பௌத்தத்தினை நிலைநாட்ட துடித்துவருகின்றார்கள் சிறுபான்மை தமிழ்மக்கள் அதிகம் செறிந்துவாழும் பகுதிகளில் மதரீதியான ஆக்கிரமிப்பு சின்னங்களை நிறுவி வருகின்றார்கள் இதுதமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாங்களில் எல்லை மாவட்டங்களான திருகோணமலை,முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகம் இடம்பெற்று வருகின்றது
அந்தவகையில்தான் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குஉட்பட்ட பொன்மாலைக்குடா பகுதியில் பௌத்த மதகுருமார்கள் சிறுபான்மை இன மக்களின் காணிக்குளு; அத்துமீறல்களை மேற்கொள்ளும் செயற்பாட்டில் புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது பதற்றநிலை தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தமது மெய்ப்பாதுகாவலருடன் சென்றபோது குறித்த மெய்பாதுகாவலர், பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
புல்மோட்டை அரிசிமலை விஹாரையை சேர்ந்த பௌத்த மதகுருவே இந்த அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களின் பூர்வீக நிலங்கள் அங்கு பெரும்பான்மை சிங்கள இனத்தவர்கள் வாழ்ந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லாத பல இடங்களில் பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளமையும் நிறுவப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.