ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டை மிக மோசமாக பாதிக்க போகின்றது!

அணி சேராக்கொள்கை என கூட்டங்களுக்கு சென்றுவரும் ஜனாதிபதிக்கு மத்திய கிழக்கு பிரதேசத்திலே இருக்கும் பிரச்சினைக்குள்ளே மூக்கை நுழைக்காமல் இருக்க தெரியவில்லை. சுமந்திரன் எம்பி 

அணி சேராக்கொள்கை என கூட்டங்களுக்கு சென்றுவரும் ஜனாதிபதிக்கு மத்திய கிழக்கு பிரதேசத்திலே இருக்கும் பிரச்சினைக்குள்ளே மூக்கை நுழைக்காமல் இருக்க தெரியவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இன்றையதினம் (17.01.2024) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் அணிசேரா மாநாட்டுக்காக நாட்டை விட்டு செல்கின்றார் என செய்தி வந்திருக்கின்றது. அணி சேராக்கொள்கை எங்கள் நாட்டின் கொள்கை என்று கூறி அந்த கூட்டங்களுக்கு சென்றுவரும் ஜனாதிபதிக்கு மத்திய கிழக்கு பிரதேசத்திலே இருக்கும் பிரச்சினைக்குள்ளே மூக்கை நுழைக்காமல் இருக்க தெரியவில்லை.

அண்மையில் சிவப்புகடல் பிராந்தியத்திலே மோதல்கள் ஏற்படுவது சம்பந்தமாக இலங்கை கடற்படையின் பங்களிப்பினையும் செய்வதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் அவராக முடிவெடுத்திருக்கின்றார்.

எங்களுடைய நாடு அமைந்திருக்கும் பிராந்தியத்திலே இந்த விடயங்களில் நாம் தலையை நுழைத்தால் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அணிசேரா கொள்கையோடு இருக்கும் நாடு எனில் அதனோடு சேர்ந்து இருக்க வேண்டும். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் நாட்டை மிக மோசமாக பாதிக்க போகின்றது என மேலும் தெரிவித்தார்.

Tagged in :

Admin Avatar