தையல் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை பகுதியில் அமைந்த வித்தியாதீபம் தையல் பயிற்சி நிலையத்தில் 6 மாதங்களாக தையல் பயிற்சியினை கற்று நிறைவு செய்த இரண்டாம் அணி மாணவர்களுக்ககான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17.01.2024 வித்தியாதீபன் அமைப்பின் இணைப்பாளர் லிகிர்தரன் தலைமையில் நடைபெற்றறுள்ளது.

நிகழ்வின் விருந்தினர்களா கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட பணிப்பாளர் பு.ரமணன், தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் செல்வி சி.சிவகௌரி, வணக்கத்திற்குரிய பங்குத்தந்தை லான்போவர் அடிகளார் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

நிகழ்வில் விருந்தினர்களால் தையல் பயிற்சியினை நிறைவுசெய்த பெண்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுகம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது இதன்போது தையல் பயிற்சி பெற்ற மாணவர்களின் தையல் பொருட்கள் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.


வீத்தியாதீபம் சுவீஸ் தையல் பயிற்சி நிலையத்தினால் தாயகத்தில் கல்வி மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் நலிவுற்ற எம்மை தற்சார்பே காக்கும் என்ற தொனிப்பொருளில் தையல் பயிற்சி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tagged in :

Admin Avatar

More for you