புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் கடந்த 07.01.2024 அன்று கிணற்றினை இறைக்கும் போது கிணற்றில் இருந்து மண்ணெண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை கிராமத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கிணற்று நீரில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது அதன் எரிபற்று நிலையினை உறுதிப்படுத்தப்பட்டு கிராம வாசிகளால் இது மண்ணெண்ணெய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த வீட்டிற்கு சென்று வழக்கு பதிவுசெய்துள்ளார்கள்.
கிணற்றில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது தொடர்பான வழக்கினை கடந்த 09.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
இதன்போது குறித்த கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் கொடுத்து பரிசோதனை செய்து அதன் அறிக்கையினை 24.02.2024 அன்று நீதிமன்றிற்கு சமர்ப்பிக்குமாறு பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதிலும் குளிப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
அருகில் உள்ள பொதுக்கிணறு ஒன்றில் இருந்து நீர் எடுத்துக்கொண்டுவந்து வீட்டில் வைத்து துணிகளை துவைப்பதாகவும் குளிப்பதாகவும் குடிக்கவும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.