தேராவில் குளத்து நீரினை வெளியேற்ற திட்டம் !

புதுக்குடியிருப்பில் கடும் மழை காரணமாக உடையார் கட்டு தெற்கு கிராமத்தில் உள்ள தேராவில் குளம் நீரம்பியுள்ளதால் அற்கு அண்மையில் உள்ள குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக அருகில் உள்ள குடும்பங்களின் வீடுகளுக்குள் குளத்து நீர் புகுந்துள்ளதால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

தேராவில் குளம் நீர் நிரம்பிய நிலையில் குளத்தினை அண்மிய மக்களின் குடியிருப்புக்கள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ன  இதனால் மக்கள் வீடுகளில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது குடிநீர்  பிரச்சினை சுகாதார பிரச்சினையினை எதிர்கொண்ட8 குடும்பங்கள் இவ்வாறு மூங்கிலாறு ஆராம்ப பாடசாலையில் இன்று (09.01.24) இடைத்தங்கல் முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

உடையார் கட்டு வடக்கு,உடையார் கட்டு தெற்கு,தேராவில் கிராமங்களை சேர்ந்த மக்களின் வீடுகளுக்குள் குளத்து நீர் சென்றுள்ளதால் பாம்பு உள்ளிட்ட விசபூச்சிகளின் தொல்லை காணப்படுவதாகவும் குடிநீரினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

தேராவில் கிராமத்திற்கு சொல்லும் முதன்மை வீதி குளத்து நீரில் மூழ்கி காணப்படுகின்றது இதனால் இந்தவீதியூடன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குளத்து நீரினை வெளியேற்றுவதற்காக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் உடையார் கட்டு தெற்கு கிராம சேவையாளர் அலுவலத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் வீதிஅபிவிருத்தி அதிகார சபை  பொறியியலாளர் நீர்வளங்கள் வடிகாலமைப்பு,விவசாய திணைக்களத்தினர்,வனவளப்பிரிவினர் பிரதேச செயலக அதிகாரிகள்,பிரதேச சபை அதிகாரிகள் கமக்கார அமைப்பினர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கிராமசேவைளார்கள் உள்ளிட்டவர்கள்  கலந்துரையாடி குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் குளத்து நீரினை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குளத்து நீரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக தங்காலிக தங்கு இடமான மூங்கிலாறு ஆராம்ப பாடசாலையில் தங்கவைக்க தீர்மானிக்கப்பட்டு கிராம சேவையாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் தேராவில் வீதிபகுதியில் வீதியின் குறுக்கோ தற்காலிகமாக கொட்டு ஒன்று வைத்து நீரினை வெளியேற்றுவதற்கான திட்டம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்

Tagged in :

Admin Avatar

More for you