Wednesday, May 14, 2025
HomeUncategorizedமுள்ளியவளையில் வீட்டில் இருந்த குடும்ப பெண்மீது கொலை முயற்சி!

முள்ளியவளையில் வீட்டில் இருந்த குடும்ப பெண்மீது கொலை முயற்சி!

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் கோவிலுக்கு முன்பாக வீட்டில் இருந்த குடும்ப பெண் மீது கொலை வெறித்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்போதனா மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் கடந்த 07.01.2024 அன்று இரவு கணவன் காவலாளி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வீட்டு பெண்ணான (போரில் கால் ஒன்றினை இழந்த அங்கவீனமான குடும்ப பெண்) வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் குறித்த வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாதவர்கள் பெண்ணின் மீது கடுமையாக இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்கள் கொலைசெய்யும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டதாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலைஉள்ளிட்ட பகுதிகளில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இனம் தெரியாத நபர்களின் இந்த தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் இரவு நேரங்களில் இவ்வாறு துணிகராமாக வீடுகளுக்குள் நுளைந்து வீட்டில் இருந்த பெண்மீது தாக்குதல் நடத்தியமை கிராமத்தில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலீசார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments