புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியின் தவறானமுடிவிற்கு காரணம்யார்?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் வசித்துவந்த முன்னாள் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக கடந்த 07.01.2024 அன்று மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை அமைப்பில் இருந்த கோகுலன் அல்லது சாதுரியன் என்று அழைக்கப்படும் 55 அகவையுடைய விவேகானந்தன் கோகுலன் என்ற முன்னாள் போராளி புனர்வாழ்வு பெற்று வீட்டில் வாழ்ந்த வந்த நிலையில் புலனாய்வு பிரிவினரின் தொடர்ச்சியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உளபாதிப்பிற்கு உள்ளான நிலையில் புலனாய்வாளர்களின் விசாரணைகள் தொடர்பில் உறவினர்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
புனர்வாழ்வு பெற்று வந்த பின்பும் இவர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை என்று

ஒருபிள்ளையின் தந்தையான இவர் மனைவியுடன் முரண்பாடு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் இவர் வசித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த 07.01.2024 அன்று காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் உடலம் கடந்த 09.01.2027 அன்று மரணவிசாரணை அதிகாரி முன்னிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அவரது உடலத்தினை மனைவி பொறுப்பெடுக்காத காரணத்தினால் அவரது உறவினர்கள் அவரது உடலினை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி கொண்டுசென்றுள்ளார்கள்.
அவரது உடலம் இன்று 10.01.2024 அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar