முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று பகுதியில் இலத்திரனியல் பொருட்களை திருத்தும் கடை ஒன்றினை போருக்கு முந்தியா காலம் தொட்டு போருக்கு பிந்திய தற்போதைய காலம் வரை நடத்தி வருபவர் பிராபாகரன் என அழைக்கப்படும் பிரபா அண்ணை.
இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் திருத்தும் கடையாக நடத்தி வருவதுடன் இவரது குடும்பத்தில் ஒரோ ஒரு மகன் இறுதி போரின்போது காணாமல் போன நிலையில் மகனை கண்டுபிடிப்பதற்காக மனைவியான முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் றஞ்சனா மகனை தேடிய போராட்டத்தில் மனைவி றஞ்சனா ஈடுபட்டு வரும் வேளையில் அவர்களின் குடும்ப வருமானத்தினை பிரபா அண்ணா தனது மின்னியல் திருத்தகம் ஊடாக வரும் பணிகளை வைத்து தங்கள் குடும்பத்தின் சுமையினை கொண்டு நடத்துகின்றார்.
மகனை காணவில்லை கண்டறியவேண்டும் என்ற போராட்டத்தில் இவரது மனைவி தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ள நிலையில் ஒரு தந்தையாக தனது பிள்ளையினை தொலைத்துவிட்டு எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து அவர்களின் வேலைகளை பெற்று பொறுமையாக இலத்திரனியல் பொருட்களை திருத்திக்கொடுக்கும் பணியில் செய்து வருகின்றார்.
இவ்வாறான நிலையில் இந்த குடும்பத்தின் தலைவன் ஜயப்பன் பக்த்தன் ஆண்டு தோறும் மாலைஅணிந்து சபரிமலை சென்று தரிசனம் பெற்று வழிபட்டு வருபவர் இந்த ஆண்டு அவர் சபரிமலைக்காக மாலை போட்டு சென்றவேளைதான் இவரின் சொத்தான இலத்திரனியல் திருத்தகம் 10.01.2024 அதிகாலை தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியது.
இவ்வாறன வறுமையிலும் நேர்மையில் வாழும் குடும்பங்களைத்தான் கடவுள் கடுமையாக சோதிக்கின்றார்.
மகனை தொலைத்த சோகத்திலும் நின்மதியினை தேடி கடவுளிடம் சென்றபோது வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் தொழிலான இலத்திரனியல் திருத்தகம் எரிந்து சாம்பலாகியுள்ள கதை அந்த குடும்பத்திற்கு வெந்தபுண்ணில் பாய்ந்ததை போல் இருக்கின்றது.
இவ்வாறான குடும்பங்கள் அடுத்தகட்டம் தாங்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சமூகத்தில் தமிழ்மக்கள் மத்தியில் அக்கறை கொண்டவர்கள் இவ்வாறன குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதுடன் அவர்களின் தொழிலினை விருத்திசெய்து கொடுக்கவேண்டும் என்பது பலரின் எதிர்பர்ப்பாகும்.