நேற்று(10.01.2024) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பிப்பதற்கு மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.நீதியான பொருளாதார கொள்கைக்கு எதிரான அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
தமக்கும் 35,000 கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள்,ECG தொழில்நுட்ப நிபுணர்கள், EEGதொழில்நுட்ப நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார் நீண்ட தூரங்களில் இருந்து செல்லும் நோயளர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மக்களுக்கான சேவையினை வழங்குவதில் மருத்துவமனைகளில் உள்ள மேற்குறிப்பிட்ட ஊழியர்களின் சேவை என்பது முக்கியமானது இதனை அரசாங்கம் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை நிறைவுசெய்யவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.