Wednesday, May 14, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்து விளையாட்டில் சாதனை புரிந்து இலங்கைக்கு பெருமை சேர்த்த அகிலம் அக்கா என்று அழைக்கப்படும் அகிலத்திருநாயகி அவர்களை இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அகிலத்திருநாயகி அவர்களை ஜனாதிபதி அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி கௌhரவித்து மதிப்பளித்துள்ளார்.

வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் பாடகி கில்மிசாவினை சந்தித்து கலந்துரையாடியுள்ள படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில் விளையாட்டில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அகிலம் அக்காவினை அழைத்து மதிப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
முல்லைத்தீவு மாண்ணிற்கு பெருமைசேர்க்கும் வகையில் உலத்தில் இலங்கைக்கு புகழினை தேடித்தந்த அகிலத்திருநாயகிக்கு உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments